என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

>> Friday, May 28, 2010

Read more...

தாய்........அம்மா............"தாய்மை"

>> Sunday, May 16, 2010

உணரவில்லை முழுமையாக
இந்த வார்த்தையை நான்
தாயாகும் வரை....

அத்தனை வலியையும் மீறி
பிஞ்சு மழலையை என்னிருகை
ஏந்தியபோது எதுவுமே உணரவில்லை...

பேரின்பத்தை தவிர,

முன்பெல்லாம் எண்ணுவேன்
பெண் ஜென்மமே பாவப்பட்டதென......
இப்போது வருந்துகிறேன் அதற்காக......




என் மகன் தந்த முத்தத்தில்
பட்ட எச்சில் துளியில்
தெரிகிறது என் சொர்க்கம்.....

Read more...

எனக்கான காரணங்கள்

>> Monday, May 10, 2010

எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...
எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...

Read more...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!

>> Saturday, May 1, 2010

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

தொண்ணுறு நிமிடங்கள் தொட்டு அணைத்த காலம் தான்!
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சில நிமிடம்! பையத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்த படி கண்ணிரில் சில நிமிடம்!
இலக்கணம்மே பாராமல் எல்லா இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!


எது நியம் எது பாவம் இருவருக்கும் தோண்றவில்லை!
அது இரவா அது பகலா அதுபத்தி அறியவில்லை!
யார் தொடங்க! யார் முடிக்க ! ஒரு வழியும் தோண்றவில்லை!
இருவருமே தொடங்கி விட்டோம்! இதுவரைக்கும் கேள்வி இல்லை!
அச்சம் கலைந்தேன்! ஆசையில் எனை நீ அணைத்தாய்!
ஆடை கலைந்தேன்! வெட்கத்தை நீ அணைத்தாய்!


கண்ட திரு கோலம் கனவாக மறைந்தாலும்!
கடைசியில் நீ அழுத கண்ணீர் இன்னும் கையில் ஓட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP