பகவத்கீதை - செயல்முறை விளக்கம்
>> Wednesday, August 25, 2010
தேவையான பொருட்கள்
1. கண்ணாடி தம்ளர்.
2.கைப்பிடிக்கும் குறைவான மண்.
3.நீர்.
4.கொஞ்சம் கவனம்.
செயல்முறை.
கண்ணாடி தம்ளரை ஒரு மேசையின் மீதுவைக்கவும்.அதில் முக்கால் பங்கிற்கு நீரை ஊற்றவும்.எடுத்துவைத்திருக்கும் மண்ணை அந்த தம்ளரில் நீர் வெளியே தளும்பாமல்கொட்டவும்.
விளைவு;
1. நீர் உடனடியாக கலங்கிவிடும். தன் நிலையிலிருந்துமாறி அழுக்காகிவிடும்.தன்னுள் வந்த் வெளிப்பொருளான மண்ணின் தன்மையை நீர் ஏற்றுக்கொள்ளும்.
2.எவ்வளவு நேரம் முடியுமோ அந்த தம்ளரையே கவனிக்கவும்.
3.ஒரு நிலையில் தன்னுள் விழுந்து தன்னை அழுக்காக்கிய மண்ணை தன்னுள்ளேயேவைத்துக்கொண்டுதண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் தெளியதுவங்கும்.
4.ஒரு நிலையில் தன்னுள்ளேயே தனக்கடியில் மண்ணை வீழ்த்திவிட்டு தண்னீர்தன் பழையதூய நிலையை எட்டி இருக்கும்.
பாடம்.
உன்னுள் தோன்றும் கச்மலமாகிய எண்னத்தை கவனி.சுய உபதேசிப்பு துவங்கிவிடும் . அப்படி துவங்கிவிட்டால் அழுக்கை மீறி நம்தூய்மை எழுந்து நிற்கும்.
0 comments:
Post a Comment