என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

நான் யார்? - ஓஷோ

>> Thursday, September 23, 2010

நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா?

எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா?
அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது.

எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.

தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.
நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.

தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.

இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.

நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம், அதுவேதான். இதுதான்”

“தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.

அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.

அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.

துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.

“அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.

“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.
கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே
உனது ‘ நான் ‘?.

நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.

Read more...

பில் கேட்ஸ் (William Henry Bill Gates ) -

பில் கேட்ஸ் (William Henry Bill Gates ) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின் தற்போதைய வயது 52.


உலக பணக்காரர்கள் வரிசையில் “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.வாழ்க்கை வரலாறுபில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல், வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார்.

பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.


1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.



1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள், நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.

பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்



பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.



இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

Read more...

மௌனம்

>> Wednesday, September 22, 2010

மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

Read more...

நான்

'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்'

என்னும் போது அங்கே

'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.

Read more...

அறியாமை

அறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

Read more...

ஞானம்

அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம்.
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.
தெரிந்ததாக வேடம் போடாதே.
சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல்.
சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

Read more...

இரவல் அறிவு

கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

Read more...

Words of jesus

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

Read more...

தேடுதல்

கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

Read more...

இயல்பாக இரு

விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

Read more...

மதம்

மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

Read more...

காலம்

யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.

Read more...

மக்கள் என்றும் உண்மையை விரும்பவில்லை அற்புதத்தைதான் விரும்புகின்றனர்

>> Sunday, September 19, 2010

சார்லின் சாப்ளின் வாழ்ந்த காலத்தில் யார் சார்லின் சாப்ளின் போல் நடிகிறார்களோ அவர்களுக்கு பரிசுக்கள் வழங்கப்படும் என்று ஒரு விழா நடைபெறுகிறது எல்லாரும் சார்லின் சாப்ளின் போல் பிரமாதமா நடித்தார்கள். இதில் நிஜ சார்லின் சாப்ளினும் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது...

கடவுளே இங்கே நேரில் வந்து நான் தான் கடவுள் என்றால் யாரும் நம்ப தயாரில்லை ஏனென்றால் மக்கள் என்றும் உண்மையை விரும்பவில்லை அற்புதத்தைதான் விரும்புகின்றனர்.

Read more...

ஆசையே துன்பத்திற்கு காரணம்

"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று ஏன் சொன்னார் புத்தர்.... ????

ஞானிகளின் பல உண்மைகள் பல கருத்துகளை உள்ளடக்கிதான் வரும்....வார்த்தைகளின் பொருளை மேலோட்டமாக பார்ககும்போது . அதன் ஆழத்தை உணராமல் போய்விடுகிறோம்.....தண்ணிரீலே எண்ணெய் கலக்கும் போது எண்ணெய் கலக்காமல்தான் இருக்கும். அதுபோல் ஆசைபட்டாலும் அந்த ஆசை ஆசையாகவே இருக்கவேண்டும். நம் வாழ்வை ஆசை என்றும் சீர்குளைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாமரை இலையில் என்றுமே ஒட்டாத தண்ணீர் போல் இருக்கவேண்டும். அப்படி நம் வாழ்வில் ஓட்டினால் புத்தர் சொன்னதுபோல் "ஆசையே துன்பம் ஆகிவிடும்". அப்படி ஒட்டாமல் இருப்பது நமக்கு கஷ்டம்தான்...முயற்சி செய்தால் முடியும் அதற்கு நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யும் போதும் விழிப்புணர்வுடன் கவனித்தால் ஆசை ஒட்டாமல் இருக்கும். இதற்கு உங்களுக்கு தியானம் மிகவும் துணைபுரியும்...தினமும் 20 நிமிடம் தனியாக அமர்ந்து கண்ணை மூடி உங்கள் மனதில் உண்டாகும் எண்ணங்களை விழிப்புடன் கவனித்தலே போதும்....உங்கள் கேள்விக்கான விடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தெரியவரும்....ஒருநேரத்தில் கேள்விகள் எல்லாம் சென்று வெறும் மௌனம் ஒன்றே உங்களிடம் இருக்கும்...அதுவே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியின் மூலாதாரம்...அதுவே ஓங்காரம்....அதுவே நீங்கள்.
இந்த பிண்டத்தில் உள்ளதே அண்டம்....

Read more...

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்தவர????

>> Saturday, September 18, 2010

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.கண்டிப்பாக அது உண்மை இல்லை

உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்

அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.

Read more...

தமிழக அரசு பேருந்தில்

>> Friday, September 17, 2010

தமிழக அரசு பேருந்தில் பயணம் சென்றால் திருக்குறளை மிஞ்சிய ஒரு வாசகம் பார்க்கலாம் அது யார் எழுதுனா என்று நீங்காளே கண்டுபிடிச்சிகிங்கோ அவ்வாசகம்...

" நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது...நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்" என்று இருக்கும்.

ஏன், நாம் என்பதற்கு பதில் "நாங்கள்" என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டாதே..."நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்" இது யாரை ஏமாத்துற வேல ஒற்றுமை என்ற பேருல ஓட்டுக்காக மொத்தமா உட்காரவச்சு கும்மியடிக்கிற வேலை......

தன்மானம் இழந்த தமிழனுக்கு பழமொழில கூட பாசாங்கான வார்த்தைகள்தான் வெளிபடுகிறது.ஆமா இதை யாரு எழுதினா என்று சொல்லலியே...
ஒரு டிப்ஸ் தரேன் கண்டுபிடியுங்க...காலையில டிபன் சாப்பிட்டு மத்தியானம் சாப்படுவரை உண்ணாவிரதம் இருந்த ஒரு உத்தமர்...?????

Read more...

படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது



இன்று உலகத்தில் படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது. இதில் அறிவாளியை விட புத்திசாலி சிறந்தவனாக என்றும் இருக்கிறான்....சினிமா படம் பார்க்க அதிகம் பேரு வருவாங்க ஆனா நல்ல தரமான எடுக்க படைப்பாளிகள்தான் குறைவு...பள்ளி படிப்பு சரியாக படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்ப கண்டுபிடிச்சாரு ஆனா அவருக்கு பின்னாடி வந்தவங்க ஏற்கனவே கண்டுபிடிச்ச பல்ப இன்னும் கண்டுபிடிச்சு அதை பிரகாச படுத்தினாங்க....இது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை. அடித்தளம் யார் இட்டார்கள் என்பதை பார்க்கவேண்டும். அதனால நான் ரொம்ப படித்தவன் ph.d முடித்தவன் B.E எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்தவன் என்று சொல்லிகொள்வதில் என்ன பெருமை வேண்டிருக்கு அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மெருகூட்டினார் அவ்வளவே...! படிக்காத காமராஜ் நாட்டுக்கு அதிகம் செய்தார் என்று சொல்றாங்க ஆனா அவரு படித்திருந்தால் இன்னும் என்னயென்னலாம் செய்துருப்பாரு என்று பல பேரு சொல்றாங்க அவரு படித்திருந்தாலும் செயரதான் செய்திருப்பாரு இதில் ஒன்றும் பெரிய அற்புதம் நடந்திருக்காது...நான் கேட்கிறேன், ரொம்ப படித்த அறிவாளிகளெல்லாம் நாட்டுக்கு என்ன அப்படி பெருசா சாதனை பண்ணிடாங்க, சமுதாயத்தில் என்ன ஒரு பெரிய விழிப்புணர்வா உண்டாக்கிட்டாங்க.... ஆராய்ந்து பார்த்தால் ஒன்றும்மில்லை...அப்படி அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஏற்கனவே செயததுடைய மிட்சமாகத்தான் அச்சாதனை இருக்கும்...படைப்பாளி என்றும் படைப்பாளிதான் அவன் புத்தி அறிவுக்கு என்றும் ஈடாகாது....அதனால் ஒருவருடைய படிப்பை மட்டும் வைத்து புத்தியின் திறமையை தவறா எடைபோடகூடாது. பலகலைகழகங்களில், நாலு பேரு உட்கார்ந்து மார்க்கு போட்டு நீ நல்லா படித்த அறிவாளி என்று சொல்லி, கைல ஒரு பட்டத்தை கொடுத்தால் நாம் அறிவாலியா.... நம்ம அறிவு நமக்கு தெரியாத அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது.....ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது......இதுதான் என் புத்தியின் அறிவு.....பதிவை பொறுமையாக படித்தற்கு மிக்க நன்றி...!
Add a caption
இன்று உலகத்தில் படிக்காதவன் கண்டுபிடித்ததைதான் பல பல்கலைகழகங்களில் ஆய்வக படிப்பாய் இருக்கிறது. இதில் அறிவாளியை விட புத்திசாலி சிறந்தவனாக என்றும் இருக்கிறான்....சினிமா படம் பார்க்க அதிகம் பேரு வருவாங்க ஆனா நல்ல தரமான எடுக்க படைப்பாளிகள்தான் குறைவு...பள்ளி படிப்பு சரியாக படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்ப கண்டுபிடிச்சாரு ஆனா அவருக்கு பின்னாடி வந்தவங்க ஏற்கனவே கண்டுபிடிச்ச பல்ப இன்னும் கண்டுபிடிச்சு அதை பிரகாச படுத்தினாங்க....இது ஒன்றும் பெரிய சாமர்த்தியம் இல்லை.
அடித்தளம் யார் இட்டார்கள் என்பதை பார்க்கவேண்டும். அதனால நான் ரொம்ப படித்தவன் ph.d முடித்தவன் B.E எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்தவன் என்று சொல்லிகொள்வதில் என்ன பெருமை வேண்டிருக்கு அடித்தளம் இட்டவன் உனக்கு முன்னே இருக்கிறான். அதற்கு நீ ஒரு மெருகூட்டினார் அவ்வளவே...!
படிக்காத காமராஜ் நாட்டுக்கு அதிகம் செய்தார் என்று சொல்றாங்க ஆனா அவரு படித்திருந்தால் இன்னும் என்னயென்னலாம் செய்துருப்பாரு என்று பல பேரு சொல்றாங்க அவரு படித்திருந்தாலும் செயரதான் செய்திருப்பாரு இதில் ஒன்றும் பெரிய அற்புதம் நடந்திருக்காது...
நான் கேட்கிறேன், ரொம்ப படித்த அறிவாளிகளெல்லாம் நாட்டுக்கு என்ன அப்படி பெருசா சாதனை பண்ணிடாங்க, சமுதாயத்தில் என்ன ஒரு பெரிய விழிப்புணர்வா உண்டாக்கிட்டாங்க.... ஆராய்ந்து பார்த்தால் ஒன்றும்மில்லை...அப்படி அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஏற்கனவே செயததுடைய மிட்சமாகத்தான் அச்சாதனை இருக்கும்...
படைப்பாளி என்றும் படைப்பாளிதான் அவன் புத்தி அறிவுக்கு என்றும் ஈடாகாது....அதனால் ஒருவருடைய படிப்பை மட்டும் வைத்து புத்தியின் திறமையை தவறா எடைபோடகூடாது.
பலகலைகழகங்களில், நாலு பேரு உட்கார்ந்து மார்க்கு போட்டு நீ நல்லா படித்த அறிவாளி என்று சொல்லி, கைல ஒரு பட்டத்தை கொடுத்தால் நாம் அறிவாலியா.... நம்ம அறிவு நமக்கு தெரியாத
அறிவு எனபது ஏற்கனவே அறிந்ததை அறிவது.....ஆனால் புத்தி எனபது அறியாததை அறிவது...........

Read more...

OSHO







Read more...

ரமணர்


தனக்காக வாழும் நெஞ்சங்கள் பலப்பேர் பிறருக்காக வாழ்பவர்கள் சிலபேர். "வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியது" என்று வள்ளலார் கூறினார். நீங்கள் மனித உயிர்கள் படும் அவலங்களை எண்ணி வேதனை கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிறு எறும்பு கூட தன்னால் துன்புறுக கூடாது என்று பல சரித்திர நாயகர்கள் இருந்தனர். அவர்களுள் புத்தர், ஒரு வேடன் வேட்டையாடிய மானை விடிவித்து மானை கற்றிய கயற்றினில் தன் கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தார். வேடன் இதை கண்டு மனம் வேதனை கொண்டு புத்தரின் வழியை பின்பற்றினான். இதேபோல் ரமணர் ஒருமுறை வழக்கமாக நடந்து சொல்லும் பாதையில் எறும்பு புற்றை மிதித்து விட்டார். எறும்புகள் களைந்து அவற்றின் இருப்பிடமே கலைந்துவிட்டது. அதை எண்ணி ரமணர் மிகவும் வறுத்தமுற்று என்னால் தான் இவ்வேரும்புகள் துன்புற்றன என எண்ணி அவைகள் தன்னை கடிக்கட்டும் என்று எறும்பு புற்று அருகிலே கால்களை வைத்திருந்தார். கால்கள் மிகவும் ரணமாகி வீக்கமுடன் நடக்கமுடியாமல் இருந்தார். உயிர்கள் துன்புறுவதை வேதனைகொண்டு உணர்வதில் நம்மை விட ஒரு படி மேல்நிலையிலே இருந்தனர். அம்மேன்மக்கள்...

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP