உங்களில் ஒருவனாக
>> Sunday, February 14, 2010
எனது தூக்கத்தை பறித்து கொண்டு...
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...
எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...
புனித மிச்சமும் மனித எச்சமுமாய்
கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...
ஏனென்று தெரியாமல்...
எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...
எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...
புனித மிச்சமும் மனித எச்சமுமாய்
கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...
ஏனென்று தெரியாமல்...
எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.
0 comments:
Post a Comment