அன்பும் --- ஆணவமும்
>> Wednesday, October 20, 2010
பெரியவர் தான் பெரியவர் என்ற
நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே
பெரியது எப்பொழுதும் தனது
ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.
ஆனால் அன்பிற்கு
சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.
நெருங்கிவரும் எவரையும்தழுவிக் கொள்வது அன்பு.
அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும்
ஆணவம் ஒருபோதும்வளைந்து கொடுக்காது.
நீ ஆணவத்தை நெருங்கினால்
அதன் கிளைகள் இன்னும்
எட்டமுடியாமல் மேல்நோக்கி நீளும்.
அது நீ அதை நெருங்க
முடியாதபடி விரைத்து நிற்கும்.
எப்பொழுதும் எதையாவது கொடுக்க
முடியும் போது சந்தோஷப்படுவது அன்பு.
எப்பொழுதும் எதையாவது பெற
முடியும்போதுசந்தோஷப்படுவது ஆணவம்.