ரமணர்
>> Friday, September 17, 2010
தனக்காக வாழும் நெஞ்சங்கள் பலப்பேர் பிறருக்காக வாழ்பவர்கள் சிலபேர். "வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியது" என்று வள்ளலார் கூறினார். நீங்கள் மனித உயிர்கள் படும் அவலங்களை எண்ணி வேதனை கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிறு எறும்பு கூட தன்னால் துன்புறுக கூடாது என்று பல சரித்திர நாயகர்கள் இருந்தனர். அவர்களுள் புத்தர், ஒரு வேடன் வேட்டையாடிய மானை விடிவித்து மானை கற்றிய கயற்றினில் தன் கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தார். வேடன் இதை கண்டு மனம் வேதனை கொண்டு புத்தரின் வழியை பின்பற்றினான். இதேபோல் ரமணர் ஒருமுறை வழக்கமாக நடந்து சொல்லும் பாதையில் எறும்பு புற்றை மிதித்து விட்டார். எறும்புகள் களைந்து அவற்றின் இருப்பிடமே கலைந்துவிட்டது. அதை எண்ணி ரமணர் மிகவும் வறுத்தமுற்று என்னால் தான் இவ்வேரும்புகள் துன்புற்றன என எண்ணி அவைகள் தன்னை கடிக்கட்டும் என்று எறும்பு புற்று அருகிலே கால்களை வைத்திருந்தார். கால்கள் மிகவும் ரணமாகி வீக்கமுடன் நடக்கமுடியாமல் இருந்தார். உயிர்கள் துன்புறுவதை வேதனைகொண்டு உணர்வதில் நம்மை விட ஒரு படி மேல்நிலையிலே இருந்தனர். அம்மேன்மக்கள்...
Read more...