என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்
Showing posts with label Tamil jokes. Show all posts
Showing posts with label Tamil jokes. Show all posts

சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டோ இருங்க

>> Monday, March 29, 2010

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..

“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....




2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...



3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.



4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா



5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)

கணவன்: அது ஒரு இறந்த காலம்....



6) தேர்வு அறையில்...

மாணவன்: ஆல் தி பெஸ்ட்!

மாணவி: ஆல் தி பெஸ்ட்!

மாணவன் பெயில்....

மாணவி 80%நீதி:

நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)



7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..



8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...

முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...

என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?]



9) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?



10) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...



11) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..

நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....

ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....

நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....

ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?



12) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”



13) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --- JAVA* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும். * C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++



14) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)

1. படிப்பு

2. விளையாட்டு

3. பொழுது போக்கு

4. காதல்

5.

6.

7.

ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP