என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

Life Cycle

>> Monday, October 25, 2010

We all have return tickets when we are born. We don’t know the date of journey. Yesterday is cancelled Check. Tomorrow is promissory note. Today is ready cash. So do the best each and every moment….

அறிவு

>> Sunday, October 24, 2010

அறிவு மதத்தால் சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறது. செல்வம் மோட்சத்தின் பேராலும், பாவ மன்னிப்பின் பேராலும், புண்ணியத்தின் பேராலும் சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்ககூடதா??

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று வேறு எழுதி வைத்துக் கொண்டு பயமுறுத்துகின்றான். கோயில் இல்லாத ஊரில் அறிவு வளர்ச்சி ஏற்படும். அங்கு - மூடநம்பிக்கைகள் இருக்காது. எனவே நம்மை மடையனாக்க வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். அதனால் இப்படிக் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

Smile + Silence = Success

Successful people always have two things in their lips. One is smile another one is silence..!!

Money-oriented Life

"One of the greatest problems that money creates is that you never know whether you are loved or your money is loved, whether you are desirable or your money is desirable. Our whole attitude about life is money-oriented. And money is one of the most uncreative things one can become interested in."- OSHO

அன்பும் --- ஆணவமும்

>> Wednesday, October 20, 2010

பெரியவர் தான் பெரியவர் என்ற
நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே


பெரியது எப்பொழுதும் தனது
ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.
ஆனால் அன்பிற்கு
சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.

நெருங்கிவரும் எவரையும்தழுவிக் கொள்வது அன்பு.


அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும்
ஆணவம் ஒருபோதும்வளைந்து கொடுக்காது.


நீ ஆணவத்தை நெருங்கினால்
அதன் கிளைகள் இன்னும்
எட்டமுடியாமல் மேல்நோக்கி நீளும்.
அது நீ அதை நெருங்க
முடியாதபடி விரைத்து நிற்கும்.


எப்பொழுதும் எதையாவது கொடுக்க
முடியும் போது சந்தோஷப்படுவது அன்பு.

எப்பொழுதும் எதையாவது பெற
முடியும்போதுசந்தோஷப்படுவது ஆணவம்.

அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான்

அமெரிக்காவானது நாடு என்று பார்த்தால் அதற்கு 300 வருடங்கள் மட்டுமே ஆகிறது. எனவே அந்த 300 வருடங்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. எனவே அமெரிக்காதான் இந்த உலகின் மிகப்பெரிய அபாயம். குழந்தைகளின் கையில் அணுஆயுதங்கள்........ ரஷ்யா கொஞ்சம் அதிக பகுத்தறிவுடன் நடந்து கொள்ளும். அது ஒரு வயதான பழமை வாய்ந்த நாடு. மேலும் அதற்கு ஒரு நீண்ட வரலாற்றின் அனுபவமும் உள்ளது. அமெரிக்காவிற்கு என்று எந்த சரித்திரமும் கிடையாது. அங்குள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தந்தையின் பெயர், தந்தையின் முன்னோர்கள் பெயர் ஆகியவைதான் தெரியும். அவ்வளவுதான். அங்கே அவர்களின் குடும்ப மரத்தின் கிளைகள் நின்று விடும்.

அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான். சரியாக சொன்னால் கைக்குழந்தை கூட அல்ல. அது இன்னும் கருவறையில்தான் உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள சமுதாயங்களோடு ஒப்பிடும்போது, அமெரிக்கா இப்போதுதான் கருவுற்றிருப்பது போன்றது. எனவே, இந்த மக்களிடம் அணு ஆயுதங்களைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.

We celebrate everything

>> Friday, October 15, 2010

We celebrate everything.Celebration is our way to receive all the gifts from God. Life is his gift,death is his gift;the body is his gift,the soul is his gift.We celebrate everything. We love the body,we love the soul.We are materialist spiritualists.Nothing like this has ever happened in the world.This is a new experiment,a new beginning,& it has a great future."

Best Sentences use for life

"A proper spiritual approach for changing the behavior of man and establishing World Peace is Karma Yoga"


"The three main ways in which man wastes his energy are Greed, Anger and Worry.
Man's needs and achievements must be compatible to and in accordance with the purpose of his birth"


"An integrated practice of reorganising and restructuring the body and the mind for a newly planned life is kundalini yoga"


"Whatever an action may be, there is a result. And for every result there is an action or cause. This is the cause and effect system which never fails. To live in harmony, do not command, do not comment, and do not demand"

நஷ்டமேது? - இக்கவி பிறந்த கதை

>> Tuesday, October 12, 2010

"வந்ததுதான் போகுமேயல்லாது

வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?

இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்

எவருக்கும் எப்போதும் நஷ்டமேது?"



மஹான் (வேதாத்ரி மகரிஷி) தனது குடிசையின் எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த போது [செல்வந்தராய் இருந்து எழையாகி இட்டிலி சுட்டு விற்று பிழைப்பை நடத்திய காலத்தில்] கூடுவாஞ்ச்சேரியில் வீசிய புயல் காற்றில் இருந்த ஒரே ஒரு குடிசையும் அடித்துக் கொண்டு போக, அதைக் கண்டு விசனமுற்று அன்னை லோகாம்பாள் அழத் துவங்க, மகானோ துளியும் துக்கமின்றி பாடுகின்றார்........

விழிப்புணர்வு - தன்நினைவு (Self Remembering)

>> Monday, October 11, 2010

முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அனேக விஷயங்களை அறிகிறீர்கள். – அதாவது கடைகள், உங்களை கடந்து செல்லும் மக்கள், அங்குள்ள போக்குவரத்து இப்படி எல்லாவற்றையும் உணர்கிறீர்கள். நீங்கள் அனேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர்வதில்லை. – அதுதான், உங்களைப் பற்றி. நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது அநேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை உணர்வதில்லை!. தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வினை ஜார்ஜ் குருட்ஜிப் தன்நினைவு (Self Remembering) என்று அழைக்கிறார். “இடைவிடாமல், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று குருட்ஜிப் கூறுகிறார்.



நீங்கள் என்ன செய்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இடைவிடாமல் உங்களுக்குள் செய்து கொண்டு வாருங்கள்; நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்கின்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் – உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் நடந்து செல்கிறீர்கள் – அப்போது உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கலாம். நீங்கள் பேசலாம். – எதுவாக இருந்தாலும், உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கோபப்படும்போது நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் என்று விழிப்புணர்வு கொள்ளுங்கள். இப்படி இடைவிடாமல் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது. நீங்கள் ஒன்று திரண்ட ஒரு உயிராக இருக்க ஆரம்பிக்கிறீர்கள்.

குறள் - திருக்குறள்

"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று"
குறள் 157

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தந்
தகுதியான் வென்று விடல்."
குறள் 158

"இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
குறள் 314

சுகம் என்பது யாது?

>> Saturday, October 9, 2010

இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால் தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக்கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தை யிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மை யியல்பை- ஆன்மாவை-அறிவதொன்றே போதும்.

யார் தங்களை அடித்தவன்

"பகவானே,
இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்!"
என்று அவர்கள் வேண்டினர்.
"நான் யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ
அவன் தான் என்னை அடித்தான்!
அவனை நீர் கண்டுபிடியும்!! "

அவரவர் பிரரப்தப் பிரகாரம் - ரமண மகரிஷி

அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று

விவாதம் - பாதிப்பு உண்டாக்கும் (நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்)

>> Friday, October 8, 2010

****
ஓவ்வொரு விவாதத்தின் பின்னும் -ஒருவருடைய அறிவீனம் இருக்கிறது.(லூயிஸ் பிராண்டர்ஸ்)
****


****
உன்னை திட்டுபவர்களையும்,
எரிச்சல் மூட்டுபவர்களிடமும்,
விவாதம் செய்தால்,
உன் உடலுக்கும்,
மனதுக்கும் தான் வீண்பாதிப்பு உண்டாகும்.
****


****
நமக்கு எந்தவகையிலும் உதவாத செய்திகளையும்,
கதைகளையும்,விவாதங்களையும்,
பொழுது போக்குகளையும்,
முடிந்தவரையில் விலக்கி விடுங்கள்.
இவற்றுக்காகச் செலவிடும் நேரங்களைப் பயனுள்ள ஆக்கச் சிந்தனைகளுக்குச் செலவு செய்யப் பழகுங்கள்.
****


****
மனிதன் விவேகமான மிருகமாக இருப்பதை விட
விவாதம் செய்யும் மிருகமாகவே இருக்கிறான்.(அலெக்சாண்டர் ஹேமில்ட்டன்)
****

மரணம் எப்படி நிகழ வேண்டும்?

>> Thursday, October 7, 2010

மரணம் என்பது கால நிகழ்வு. உடல் என்கிற சட்டையை விட்டு ஆத்துமா (ஜீவன்) வெளியோரும் ஒரு உன்னத நிகழ்ச்சி.
இது ஆத்துமா அல்லது உடலுக்கு வலி இல்லாத நிகழ்வாக இருக்க வேண்டும்.

எப்படி மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுகிறதோ அது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது மரமும் வலி அறியாது, இலையும் வலி அறியாது....மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி .........மரண காயம் இல்லாமல்...!!!!

கீதாசாரம்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.


உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுததாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

மரணம் எப்படி நிகழும் ?

மரணம் எப்படி நிகழும்?
உடலில் தினமும் ஆயிரகனக்கான செல்கள் சாகின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன. செல்கள் பிறக்கின்ற என்ணிக்கை குறைந்து சாகின்ற என்ணிக்கையை அதிகம் ஆகும் போது மரணம் நிகழும். மரணம் என்பது உடலில் இயக்க ஆற்றல் நின்றுபோதல் ஆகும்.

உன்னிடம் இருந்தால் திருத்திகொள்

>> Tuesday, October 5, 2010




About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP